Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தூங்கி எழுந்தவுடன்… விரிவுரையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

வாலிபர் வீட்டில் பணம் மற்றும் மடிக்கணினி திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டு முனியப்பன் கோவில் பகுதியில் விஜயபாரதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் விஜயபாரதி தன் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டின் பின்பகுதி உள்ள கதவு வழியாக நுழைந்த மர்ம நபர்கள்அங்கிருந்த  மடிக்கணினி, செல்போன் மற்றும் 50,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்று விட்டனர்.

இதனையடுத்து விஜயபாரதி காலையில் எழுந்து பார்க்கும்போது மடிக்கணினி, செல்போன் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து விஜயபாரதி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் பணம் மற்றும் மடிக்கணினி செல்போன் ஆகியவற்றை திருடி தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |