தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில் வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி வட கடலோர மாவட்டங்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.