நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு திட்ட பணிகள் செய்ய இருக்கும் இடங்களை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றுலா தலமாக அரசு அறிவித்து இருக்கின்றது. அங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தொடர்ந்து புகார்கள் வரப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் அமர் குஷ்வாஹா மற்றும் செந்தில்குமார் எம்.எல்.ஏ. போன்றோர் வருவாய்த்துறையினர், வனத்துறை அதிகாரிகளுடன் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுற்றுலாதல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அந்த பகுதியில் பெண்களுக்காக தனி கழிப்பறைகள், சமுதாய கூடம், முருகன் கோவில் பகுதிகளில் சிமெண்ட் பிளவர்பிளாப் சாலை, ஜலகாம்பாறை கிராமம் முதல் மலை அடிவாரம் வரை மின் விளக்குகள், கோவில் அருகில் சோலார் விளக்கு ஒன்றும் அமைத்தல், பயணிகள் நிற்பதற்கு நிழற்குடம், சிறுவர் பூங்கா, படிக்கட்டுகள் பக்கவாட்டில் தடுப்புச் சுவர்கள் அமைத்தல், சிறு பாலம் கட்டுதல், வணிக வளாகங்கள் அமைத்தல், சுற்றி தடுப்பு சுவர் அமைக்கும் நீர்வீழ்ச்சி பகுதியில் முட்கம்பிகள் அமைக்க என 1 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று ஏழருவி பகுதியில் கழிப்பிடம், சமுதாயக்கூடம், முள்வேலி அமைத்தல் ஆகிய பணிகளுக்காக 36 லட்சம் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு மொத்தம் 1 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் இதனை வனத்துறையினரின் அனுமதியுடன் செயல்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பணிகளை கலெக்டர் குஷ்வாஹா, செந்தில்குமார் எம்.எல்.ஏ. உதவி வன பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமார், வனசரக அலுவலர் பிரபு போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர்.