கார்பன் சுழற்சி முறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக காலநிலை மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நமது பூமியானது காற்று, நீர் போன்றவற்றினால் நிரம்பியுள்ளது. இதனையடுத்து கடல், தாவரங்கள், உயிரினங்கள், நிலம் ஆகியவற்றில் கார்பன் அணுக்களின் இயக்கம் மற்றும் பரிமாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த கார்பன் சுழற்சியானது இயற்கை தெர்மொஸ்டாட் ஆக செயல்பட்டு பூமியின் வெப்பநிலையை சீராக ஒழுங்குபடுத்துகிறது. நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை முறையானது 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வித்தியாசமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சுழற்சி முறையானது வியப்பூட்டும் வகையில் மாறுபாடு அடைந்துள்ளதாக லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த சுழற்சியினால் காலநிலையில் மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றமானது வெப்பம் மற்றும் குளிர் போன்ற பருவ காலங்களில் மாறுபாட்டை ஏற்படுத்தி பூமியை குளிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த மாற்றமானது நிகழ்வதற்கு முன் வாயு மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் செறிவு அதிகமாக இருந்ததால் பசுமைவீட்டு வாயுக்களின் காரணமாக பூமியானது மிகவும் வெப்பம் அடைந்துள்ளது.
இந்த கார்பன் சுழற்சி முறையில் மாற்றம் நிகழ்ந்ததற்கு நிலவாழ்தாவரங்களின் வளர்ச்சியும் முக்கியமானதாகும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த ஆராய்ச்சி குறித்து பிலிப் போக் வான் ஸ்ட்ராண்ட்மேன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் “நிலவாழ் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் நீரிலிருந்து சிலிக்கானை பிரித்தெடுத்தல், நீர் வாழ் உயிரினங்கள் தங்களுக்கென செல்சுவர் மற்றும் எலுபும்புகளை உருவாகியதன் விளைவாக நிகழ்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார். இந்த ஆய்வானது நாசா ஆதரவளித்ததின் பெயரில் ஜூலை 14 அன்று NATURE பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுழற்சி மாற்றத்தின் காரணமாக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் துரித செயலின் அடிப்படையில் நிலவாழ் விலங்குகள் முதல் முறையில் உருவாகின என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள பல்வேறு இடங்களில் 600-க்கும் மேற்பட்ட பாறை மாதிரிகளில் உள்ள லித்தியம் ஐசோடோப்புகளை பரிசோதனை செய்ததில் நிலத்தின் தாவரங்கள் உருவாக்கம் மற்றும் விரிவாக்கம் அந்த ஆய்வில் நடத்திய மாதிரிகளுடன் ஒத்துப்போனதாக தெரிவிக்கின்றனர்.