தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய பல்வேறு விதமாக ஏமாற்று வேலைகளும் அதிகரித்து வருகிறது. இதுபோன்று ஏமாற்றுபவர்களிடம் மக்கள் ஏமாந்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் முட்டைக்கு பதிலாக முட்டை போன்ற பிளாஸ்டிக் பொருளை கம்மி விலைக்கு வாங்கி ஒரு கிராமம் முழுவதும் ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மினி வேன் ஒன்றில் வியாபாரி ஒருவர் 30 முட்டைகள் ரூ.130 க்கு தருவதாக கூறியுள்ளார்.
இதனால் குறைந்த விலைக்கு முட்டை கிடைக்கிறது என்று அந்த கிராமம் முழுவதும் உள்ள அனைவருமே அடித்து பிடித்து முட்டைகளை வாங்கிச் சென்றுள்ளனர் .முட்டைகள் எல்லாம் விற்று தீர்ந்தவுடன் வியாபாரி அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ளார். இதையடுத்து முட்டையை வீட்டிற்கு கொண்டு சென்ற கிராம மக்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முட்டையை வேக வைத்துள்ளனர்.
ஆனால் முட்டையை உடைத்து உள்ளே பார்த்தபோது ஒன்றுமே இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் எல்லா முட்டையையும் உடைத்து பார்த்துள்ளனர். அப்போதுதான் அது முட்டை இல்லை பிளாஸ்டிக் போன்ற ஒரு பொருள் என்று கண்டறிந்துள்ளனர். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் அந்த முட்டை விற்றவை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.