டிஎன்பிஎல் டி20 போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதிக் கொண்டன .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி , சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.
அப்போது 16.2 ஓவர்களில் திருப்பூர் தமிழன்ஸ்அணி 7 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி பாதியில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.