Categories
உலக செய்திகள்

என்னோட மாமியாருக்கு… “ஒரு நல்ல பாய்பிரண்ட் வேண்டும்”… மருமகள் கொடுத்த விளம்பரம் …!!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு மருமகள் தனது மாமியாருக்கு பாய்பிரெண்ட் தேவை என்று விளம்பரம் கொடுத்து இருந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த மருமகள் ஒருவர் 40 – 60 வயது இருக்கும் தனது மாமியாருக்கு பாய் பிரண்டாக இருக்க வேண்டுமென்று அமெரிக்காவின் பிரபல விளம்பர வலைத்தளமான கிரெய்க்ஸ்லிஸ்டில் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் அதில் பாய் பிரண்டாக வருபவர் இரண்டு நாட்களுக்கு மட்டுமே என்று ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபருக்கு 960 டாலர்கள் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 72,000 ஆகும்.

நியூயார்க்கில் உள்ள ஹட்சனில் வசிக்கும் அந்த அந்த பெண் 51 வயதான தனது மாமியாருக்காக இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளார். மேலும் அந்த விளம்பரத்தில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு கட்டாயம் டான்ஸ் மற்றும் வரும்படியான பேச்சுத்திறன் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு காரணம் மாமியார் தனிமையில் இருக்கக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. விளம்பரம் கொடுத்த மருமகள் தனது கணவருடன் வெளியூர் செல்ல இருப்பதால், மாமியார் தனிமையில் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளார். இந்த விளம்பரமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |