இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் பிரபலமாக ஒன்றாக மாறிவிட்டது. அதில் வீடியோ கால், சாட்டிங் வசதி ஆகிய சேவைகளும், புதிய சேவைகளும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் குரூப் அழைப்புகளில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி குரூப் அழைப்புகளில் பயனர்கள் இடையில் சென்று இணைந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. மேலும் குரூப் அழைப்புகளில் யாரெல்லாம் பங்கேற்றுள்ளனர், யாரெல்லாம் அழைக்கப்பட்டும் இணையவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.