Categories
உலக செய்திகள்

தங்கையிடம் தவறாக நடந்து கொன்ற சிறுவன்.. வாக்குமூலத்தால் அதிர்ந்துபோன காவல்துறையினர்..!!

பாகிஸ்தானில் 14 வயதுடைய ஒரு சிறுவன், 7 வயதுடைய தன் தங்கையை பலதடவை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் நங்கனா சாஹிப் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி கடந்த மாதத்தில் காவல்துறையினரிடம், தன் 7 வயது மகள் மாயமானதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே காவல்துறையினரின் குழு, அச்சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். எனினும் சிறுமி கிடைக்கவில்லை.

அதற்கு மறுநாள் அந்த கிராமத்திற்கு அருகே இருக்கும் வயலில் சிறுமியின் உடல் கண்டறியப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. அதன்பின்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சுமார் 150-க்கும் அதிகமான நபர்களை வரவழைத்து அவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

ஆனால் அச்சிறுமியின் 14 வயது அண்ணனின் டிஎன்ஏ மாதிரி மட்டும் பொருந்தியதால், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அச்சிறுவன், அளித்த வாக்குமூலம், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அச்சிறுவன் தன் சகோதரியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் பின்பு கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் விலங்குகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியிருக்கிறார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அச்சிறுவனின் பெற்றோரிடம், குழந்தைகளை  தங்கள் கண்காணிப்பில் வைத்து பாருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.

Categories

Tech |