கடல் வழியாக விரலில் மஞ்சளை கடத்த முயன்ற லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் இருக்கும் கடல் வழியாக விரலிமஞ்சள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு லாரியில் இருந்து மூட்டைகளை சிலர் படகில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்த படகு மூலம் தப்பிச் சென்று விட்டனர். அதன் பிறகு காவல் துறையினர் அங்கிருந்து லாரியை சோதனை செய்தபோது அதில் விரலிமஞ்சள் அதன் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உடன்குடி சுல்தான் பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் அவர்கள் கடத்த முயன்ற 5 டன் விரலி மஞ்சள் மற்றும் லாரியை பறிமுதல் செய்ததோடு அதை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் விரலிமஞ்சள் கடத்திய குற்றத்திற்காக பாலமுருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.