Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு போகலாம்…. அறிவுரையை பின்பற்றுங்கள்…. தளர்வுகள் அளித்த பிரபல நாடு…!!

அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் காரணமாக அமெரிக்க மக்களை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அமெரிக்கா நான்காம் நிலை எச்சரிக்கையை விடுத்திருந்தது. தற்போது இந்தியாவில் 125 நாட்களுக்கு பின் பாதிப்பானது ஒரு நாளுக்கு 30000மாக குறைந்துள்ளது.  இதனையடுத்து அமெரிக்க நாடு நான்காம் நிலை எச்சரிக்கையை விடுத்து மூன்றாம் நிலை எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா செல்லும் அமெரிக்க மக்கள் பயண கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி இந்தியா செல்ல விரும்புவோர் இரண்டு தவணை ஊசிகளை செலுத்திய பின்பு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தும் விதிமுறைகளை பின்பற்றி செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் இந்தப் பயணம் தொடர்பான முடிவுகளை மறுபரிசீலனை செய்யவும் அறிவுரைகள் கூறப்பட்டுள்ளது. இந்த பயண கட்டுப்பாட்டு விதிமுறைகளை நான்காம் நிலையிலிருந்து 3-ம் நிலைக்கு இந்தியாவிற்கு மட்டுமின்றி பாகிஸ்தானுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |