பிக்பாஸ் பிரபலம் கவின் வெப்சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற நட்சத்திரங்கள் அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தற்போது பிஸியான நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்ட நடிகர் கவின் தற்போது லிப்ட் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் கவின் அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப்சீரிஸ்க்கு ‘ஆகாசவாணி’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.