குற்ற வழக்கில் தொடர்புடைய 41 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குகளில் கைது ஆகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மற்றும் ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி தனிப்படை காவல்துறையினர் திருநெல்வேலி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் பல்வேறு குற்ற வழக்கில் கைதாகாமல் தலைமறைவாக இருந்த 41 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தற்போது பிடிபட்ட 41 குற்றவாளிகளில் 6 பேர் ரவுடி பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.