அமேசான் நிறுவனர் சென்றுவந்த விண்வெளி பயணம் குறித்து தனது அனுபவங்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் புளூ ஆரிஜின் நிறுவனத்திற்கு சொந்தமான ஏவுத்தளத்திலிருந்து மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய விண்கலம் புறப்பட்டுள்ளது. இதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஷ் அவரது சகோதரர் மார்க் பெஸோஷ், வாலி பங்க் என்ற பெண் விமான பயிற்சியாளர் மற்றும் ஆலிவ் டையமன் ஆகியோர் அடங்கிய குழு சென்றது. இந்த நிலையில் விண்வெளி பயணத்தை முடித்து திரும்பிய அவர்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த விண்வெளி பயணம் குறித்து ஜெப் பெஸோஷ் பேட்டி ஓன்று அளித்துள்ளார். அதில் “இந்த விண்வெளி பயணம் எங்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாகும். விண்வெளியிலிருந்து பூமியை பார்க்க மிகவும் அழகாக மற்றும் பிரமிப்பாக இருந்தது.
https://www.instagram.com/p/CRje0TBHGPS/
வளிமண்டலத்தை பூமியிலிருந்து பார்த்தால் மிக பெரிதாக இருக்கும் ஆனால் மேலே போகப்போக லேசாக தெரிகிறது. நாம் நம் பூமியை வீணாக்குகின்றோம். நமது கண்களால் தெரிவது வேறு அக கண்களால் உணர்வது வேறு என்று கூறியுள்ளார். இந்த பயணம் வெறும் 10 நிமிடங்கள் என்பதால் நாங்கள் இருக்கையிலிருந்து எழுந்து zero gravity யை உணர்ந்தோம். நான் இனிப்புகளை சிதறும் போது அதை ஆலிவ் வாயில் கவ்விய காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டது” என பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பயணத்தில் நான்கு பொருட்களை கொண்டு சென்றுள்ளனர். அதில் ரைட் சகோதர்களின் முதல் விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு பொருள், 1783 ல் கண்டுபிடித்த முதல் ஹார்ட் ஏர் பலூன்,வெண்கல பதக்கம் மற்றும் அமெரிக்கா விமானியான எமீலியாவின் கண்ணாடி முதலியவை இருந்துள்ளன.