அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பணப் பயன்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட காவலர்கள் , தீயணைப்பு துறையினர்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்தார் திறந்து வைத்த தமிழக முதல்வர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6283 பணியாளர்களுக்கு 1093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பலன்களை வழங்கும் அடையாளமாக 9 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , தலைமைச் செயலாளர் சண்முகம் போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.