Categories
தேசிய செய்திகள்

கலால் வரி உயர்வால்… அரசுக்கு வருவாய் அதிகரிப்பு…. மத்திய அமைச்சர் ராமேஷ்வர் அறிவிப்பு…!!!

பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பு வாயிலாக மத்திய அரசுக்கு 88 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்று மத்திய அமைச்சர் ரமேஷ்மர் தெலி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிக அளவில் உயர்ந்து கொண்டு வருகிறது. இது சமீப காலமாக பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மத்திய அரசும் மாநில அரசுகளும் வெவ்வேறு வகையில் வரிவிதிப்பு காரணமாக பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரி வசூல் காரணமாக மத்திய அரசு அதிக வருவாயை ஈட்டி வருகின்றது.

மக்களவையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ரமேஷ்மர் தெலி எழுத்துப்பூர்வமாக வெளியிட்டுள்ள பதிவில், 2020 21 நிதியாண்டில் மத்திய அரசுக்கு பெட்ரோல் டீசல் வரி வருவாயாக 3.35 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 88 சதவீதம் அதிகமாகும். பெட்ரோலுக்கான வரி லிட்டருக்கு 19. 98 இல் இருந்து 32.92 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல டீசல் 15.83 இல் இருந்து 31.8 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

2019 20 நிதியாண்டில் பெட்ரோல் டீசல் வரி வருவாய் 1.78 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. அதன் பின்னர் வரியை உயர்த்தியதன் காரணமாக சென்ற ஆண்டில் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. 2019 20 ஆம் ஆண்டில் 2.13 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அதே போல இந்த ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் மட்டும் 1.01 லட்சம் கோடி கிடைத்துள்ளது.

Categories

Tech |