சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாங்குப்பம் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் பாலாற்று பகுதியிலிருந்து வேனில் மணல் மூட்டைகளை கடத்திச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தீவிர ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வேனில் வந்து கொண்டிருந்த பார்த்திபனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் நடத்திய சோதனையில் பார்த்திபன் சட்டவிரோதமாக மணல் மூட்டைகளை கடத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பார்த்திபனை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த மணல் மூட்டைகள் மற்றும் வேனை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.