Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எனக்கு வேற வழி தெரியல” ரியல் எஸ்டேட் அதிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் பிரகாஷ் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு எஸ்வந்த், பரத் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரகாஷ் தனது விவசாய நிலத்தில் பசுமை குடில் அமைத்து ரோஜா, மிளகாய் போன்றவற்றை பயிரிட்டு ஏற்றுமதி செய்துள்ளார். இதனையடுத்து விவசாயத்திலும், ரியல் எஸ்டேட் தொழிலிலும் பிரகாஷுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் தனது பசுமை குடில் பண்ணையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |