Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சின்ன தீக்குச்சியால்…. முதியவருக்கு ஏற்பட்ட சோகம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

தீக்காயம் ஏற்பட்டு முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூங்குவதற்காக செல்லும் போது விளக்கை எரிய வைத்து விட்டு தீக்குச்சியை வீசியுள்ளார். அந்த தீக்குச்சி ஆறுமுகத்தின் துண்டின் மேல் பட்டு அவரின் வயிற்றுப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது.

அதனால் ஆறுமுகம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் ஆறுமுகம் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |