Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்த புகார்…. கடை உரிமையாளருக்கு அபராதம்…. அதிகாரியின் எச்சரிக்கை….!!

சுகாதாரமற்ற பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் அபராதம் விதித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி நகரப்பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்றல் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உணவு பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி மன்னார்குடி பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெருவில் உள்ள கடைகள், ஓட்டல்கள் போன்றவற்றில் திடீர் ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடைசெய்யப்பட்ட நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் 3 கிலோ அளவுக்கு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் பதிவு மற்றும் உரிமம் இல்லாத கடைகளுக்கு உரிய சான்றிதழ்களைப் பெற 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அவ்வாறு பெறாத கடைகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அதிகாரிகள் விதித்துள்ளனர். எனவே பொதுமக்கள் உணவு பாதுகாப்பு குறித்து புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சவுமியாசுந்தரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |