மத்திய சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 1,50,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய சீனாவிலுள்ள ஹெனான் என்னும் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும் கன மழையினால் ஹைஹே ஆறு மற்றும் மஞ்சள் ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சுரங்க ரயில் பாதையினுள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்கிருந்த பொதுமக்கள் நீரில் தத்தளித்து வெளியேறியுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதற்கிடையே ஹெனான் மாவட்டத்தின் அரசாங்கம் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளத்தால் சுமார் 1,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.