இறந்து கிடந்த சிறுத்தையை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்
மீட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வனப்பகுதிக்குள் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புலிகள் காப்பக மருத்துவர் அசோகன் சிறுத்தைக்கு உடற்கூறு பரிசோதனை செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுத்தையின் உடல் பாகங்களை உடற்கூறு ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைத்துள்ளார். இது பற்றி அசோகன் கூறும் போது இறந்த சிறுத்தை 5 வயதுடைய ஆண் சிறுத்தை எனவும், உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுத்தையின் உடல் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.