Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏதோ மர்மமா இருக்கு…. வாயில்லா ஜீவன்களுக்கு நேர்ந்த சோகம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மர்ம நோயால் கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்களது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கால்நடைகளை ஏதோ ஒரு மர்மநோய் தாக்கி வருவதால் அவைகள் சரியாக தீவனம் சாப்பிடுவதில்லை. மேலும் ஆடுகள் சில நாட்களில் இறந்து விடுகின்றன. இந்நிலையில் வன்னிகுடி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் வளர்த்து வந்த 2 ஆடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது.

இதே போன்று அவரது பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் ஒருவர் வளர்த்து வந்த மாடும், கன்று குட்டியும் திடீரென இறந்தது. இதனால் கால்நடைகளை வளர்ப்போர் மற்றும் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மாவட்ட கால்நடைதுறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையில் கடந்த சில நாட்களாக ஏதோ ஒரு மர்மநோய் நாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை தாக்குகிறது. இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். எனவே மருத்துவ முகாம் நடத்தி கால்நடைகளை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |