Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த இறப்பில் மர்மம் இருக்கு… தொழிலாளியின் சகோதரன் அளித்த புகார்… கள்ளக்காதலி உட்பட 2 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளி கொலை செய்த கள்ளக்காதலி உட்பட 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டியில் செயல்பட்டு வரும் பேப்பர் ஸ்டோரில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்த சங்கிலி முருகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன், சரவணன், ராஜா ஆகியோர் வேலை பார்த்து வருவதால் அனைவரும் போதுப்பட்டியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 17 தேதி அன்று சங்கிலி முருகன் குடிபோதையில் அப்பகுதியில் உள்ள சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த வந்த அவரது குடும்பத்தினரும் சங்கிலி முருகனின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்று புதைத்துள்ளனர்.

இந்நிலையில் என்னுடைய சகோதரரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக சங்கிலி முருகனின் சகோதரன் பாண்டித்துரை நாமக்கல் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சங்கிலி முருகனுக்கு போதுப்பட்டியை சேர்ந்த பாத்திமா(33) என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியில் சங்கிலி முருகன் மது அருந்திவிட்டு பாத்திமாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருடன் வேலை பார்த்துவரும்  ராஜா இந்த சண்டையை தடுக்க முடியன்றபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜா மற்றும் பாத்திமா இணைந்தது சங்கிலி முருகனை அடித்து அங்கிருந்த சாக்கடையில் தள்ளி விட்டுள்ளனர். அதில் அவருக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் வெளியாகியுள்ளது. மேலும் காவல்துறையினர் பாத்திமா மற்றும் ராஜாவை கைது செய்து விசாரணை மேகொண்டு வருகின்றனர். இதனையடுத்து நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் புதைக்கப்பட்ட சங்கிலி முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இந்நிலையில் கொலை வழக்கின் உண்மையை கண்டுபிடித்த காவல்துறையினரை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டியுள்ளார்.

Categories

Tech |