Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்ன கோச் கோவமா போறாரு” …. ‘ஆத்திரமடைந்த இலங்கை பயிற்சியாளர் ‘….வைரலான வீடியோ …!!!

இந்தியாவுக்கு எதிரான  2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தவுடன் அந்த அணியின் பயிற்சியாளர் கோபத்துடன் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது .இதில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 276 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் தொடக்க வீரரான பிரித்வி ஷா 13 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் ஷிகர் தவான் 29 ரன்களை அவுட்டானார். இதனால் இந்திய அணி 65 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ்- மனிஷ் பாண்டே ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் மனிஷ் பாண்டே 37 ரன்களில் ஆட்டமிழக்க சூரியகுமார் யாதவ் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் 160 ரன்களில் 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து  இந்திய அணி  திணறியது.

இதன்பிறகு இறுதியில் களமிறங்கிய தீபக் சாகர்- புவனேஸ்வர் குமார் ஜோடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் சாகர் பவுண்டரிகளை அடித்து விளாசி 69 ரன்களை குவித்தார் .இறுதியாக இந்திய அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து  வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றவுடன் இலங்கை அணியின் பயிற்சியாளரான ஆர்தர்  கோபத்துடன் டிரெஸ்சிங் ரூமுக்கு சென்றது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில் 160 ரன்களில் இந்திய அணியில் முக்கிய விக்கெட்டுகள் இழந்ததால்  இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இறுதியில் களமிறங்கிய தீபக் சாகர்  புவனேஷ்வர்  குமார் அதிரடி ஆட்டத்தால், இருவரையும் இலங்கை அணி வீரர்களால்  அவுட்டாக்க முடியவில்லை.இதுதான்  பயிற்சியாளரின் கோபத்திற்கு காரணம் என்று ரசிகர்கள் இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.

Categories

Tech |