Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதனால நிறைய வீணாயிற்று…. சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

தாமதமின்றி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ரெகுநாதபுரம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் 1500 நெல் மூட்டைகளில் 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்து காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியது. இதுகுறித்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆதலால் கரம்பக்குடி – தஞ்சாவூர் ரோட்டில் விவசாயிகள் டிராக்டர்களை குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அந்த சாலை மறியலில் நெல்லை தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த கரம்பக்குடி தாசில்தார், காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து அதிகாரிகள்  சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தாமதமின்றி நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என உறுதியளித்த பின் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |