நாமக்கல் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 275 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு என 4 போலீஸ் உட்கோட்டங்கள் உள்ள மொத்தம் 37 காவல்நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதன்படி 27 சட்டம் ஒழுங்கு காவல்நிலையம், 4 மகளிர் காவல்நிலையம், 6 போக்குவரத்துக்கு காவல்நிலையம் உள்ள நிலையில் மொத்தம் 800 காவல்துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றும் போலீசாரை இடமாற்றம் செய்வதற்கான கூட்டம் நேற்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஒரே உட்கோட்டத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றிய காவல்துறை அதிகாரியாக இருந்தால் மீண்டும் ஒரே உட்கோட்டத்தில் பணியாற்ற முடியாது என விதிமுறை விதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இடம்மாற்றி செல்ல விருப்பப்பட்டவர்களும் 3 காவல்நிலையங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்துள்ளனர்.
மேலும் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ் குமார் தாக்கூர் தலைமையிலும், கூடுதல் சூப்பிரண்டு அதிகாரிகளான செல்லப்பாண்டியன், சுஜாதா மற்றும் துணை சூப்பிரண்டு அதிகாரிகளின் முன்னிலையில் இந்த கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த கலந்தாவில் முன்னுரிமையின் அடிப்படையில் மொத்தம் 275 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது காவல்துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.