இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானுடன் தொடர்ந்து உரசல்கள் , சில சமயங்களில் அது எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல்கள் இது தவிர தொடர்ந்து இரண்டு பக்கம் இருந்து பல்வேறு விதமான புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய விமானப்படை தளபதி பி.எஸ் தனோவா ஓய்வு பெற இருக்கும் சூழலில் புதிய விமானப்படை தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
இதற்க்கு தகுதியான இதற்கு மூன்று அதிகாரிகள் தேர்ந்தெடுத்து அதில் ஒருவரை தற்போது மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.ஏனென்றால் இந்திய விமானப் படையில் புதிய விமானங்கள் வர இருக்கின்றனர். அதே போல சமீபத்திலே பாலக்கோட்டில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இதையடுத்து எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என்று முன்னதாகவே எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் படி இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இவர் விமான படையில் துணைத் தளபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.