விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கார்மேகம் என்பவர் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் காணொளி காட்சி மூலம் வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது என அறிவித்துள்ளார். இந்தக் கூட்டமானது காலை 10:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதற்கு தங்களின் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகத்திற்குச் சென்று காணொலிக் காட்சி மூலம் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் தங்களின் பெயர்களை வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விவசாயிகளின் கோரிக்கை மற்றும் வேளாண்மை குறித்த சந்தேகங்கள், குறைகள் போன்றவற்றை விண்ணப்பம் மூலம் உதவி இயக்குனரிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.