ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டவருக்கு கோவை ஐஎஸ்ஐ மருத்துவமனைக்கு நிவாரண நிதி அழைக்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் 1820 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கோவையை சேர்ந்த சிபிசிஐடி போலீசார் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி சில நிபந்தனைகளுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கினார்.
அந்த நிபந்தனை என்னவென்றால் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் நிவாரண நிதியாக கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ரூபாய் 10,000 நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் நிபந்தனையாக விதிக்கப்பட்ட தொகையை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஐஎஸ்ஐ மருத்துவமனையின் டீன் ரவீந்திரன் இடம் வழங்கினார். பின்னர் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.