Categories
உலக செய்திகள்

“இதுக்கு ஒரு முடிவே கிடையாதா!”.. நொந்து போன பிரிட்டன் பணம் கொடுக்க முடிவு..!!

பிரிட்டன் நாட்டிற்குள் புலம்பெயர்ந்த மக்கள் அதிகமானோர் ஆங்கில கால்வாயை தாண்டி  வருவதை தடுக்க பிரெஞ்சு எல்லை அதிகாரிகளுக்கு அதிக பணம் வழங்க பிரிட்டன் அரசு தீர்மானித்திருக்கிறது.

பிரிட்டனில் இந்த ஆண்டில் மட்டும் தற்போது வரை 8452 புலம்பெயர்ந்த மக்கள், ஆங்கில கால்வாயை தாண்டி நாட்டிற்குள் நுழைந்து விட்டார்கள். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 430 நபர்கள் ஒரு படகில் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் கடல் எல்லைக்குள் வந்துள்ளார்கள்.

எனவே இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய பிரிட்டன் உள்துறை செயலாளரான ப்ரீத்தி பட்டேல் பிரச்சினைக்குரிய ஒரு ஒப்பந்தத்தை செய்திருக்கிறார். அதாவது பிரான்ஸ் நாட்டிற்கு 54 மில்லியன் பவுண்டுகள் தொகை கொடுக்க தீர்மானித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சரான Gerald Darmanin-உடன் பிரீத்தி படேல் இது குறித்த ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

அதன் பின்பு பிரான்ஸ் கடற்கரையில் 200 சோதனை அதிகாரிகளுக்கும் மேல் அதிகரிக்கப்படவுள்ளார்கள். இது மட்டுமல்லாமல் ட்ரோன்கள் போன்ற வான்வெளி சோதனைகளும் அதிகரிக்கிறது. மேலும் மக்கள் எல்லையை தாண்டி வருவதை கண்காணிப்பதற்காக தொழில்நுட்பத்தை உபயோகிக்க நீண்டகாலமாக ஒரு திட்டத்தை தயாரிக்க இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

Categories

Tech |