கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் ஜூலை 24, 25 தேதிகளில் கேரளாவில் முழு ஊரடங்கு அமலுக்குவருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:- “வரும் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் கேரளாவில் முழு ஊரடங்கு அமலுக்குவருகிறது. அப்போது கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். நோய்த்தொற்று பரவலுக்கு ஏற்ப உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஆட்சியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து புதிய பாதிப்புகளை விரைவாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்கள் டிபிஆர் சராசரி அளவானது 10 சதவீதத்திற்கும் மேலுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தடுத்த நாட்களில் அதிகப்படியான பரிசோதனைகளை செய்து கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் .அதன்படி நாள்தோறும் 3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.