Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மணல் கடத்தலில் காவலர் உடந்தையா…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

இன்ஸ்பெக்டர் பெயரை பயன்படுத்தி நவீன டி.வி.யை லஞ்சமாக வாங்கிய காவலரை போலீஸ் சூப்பிரண்ட் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாட்டு வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் மணல் கடத்தி வருகின்றனர். எனவே மணல் கடத்துபவரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மணல் கடத்தும் கும்பலிடம் இருந்து காவல்துறையினர் லஞ்சமாக பணம் வாங்கிக்கொண்டு கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இன்ஸ்பெக்டர் கருணாகரன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மணல் கடத்தியவரை பிடித்து இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டபோது அந்த நபர் தங்களுக்கு நவீன டிவியை இலவசமாக வழங்கியதால் என்னை விட்டுவிடுமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

இதனால் சந்தேகமடைந்த இன்ஸ்பெக்டர் தீவிர விசாரணை மேற்கொண்டார். அப்போது அதில் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலை காவலரான தினகரன் என்பவர் மணல் கடத்தியவரிடம் உன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் நவீன டிவி ஒன்றை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகின்றது. இதனையடுத்து மணல் கடத்தியவர் லஞ்சமாக அந்த டிவியை வாங்கி தினகரனிடம் கொடுத்துள்ளார். அந்த டி.வி.யை. தினகரன் தன் வீட்டிற்கு கொண்டு போனதும் இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்தது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தினகரனை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் காவல்துறையினருக்கு  உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு இந்த மாவட்டத்தில் மணல் கடத்தல் கும்பலுக்கு போலீஸ்காரர்கள் உடந்தையாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |