14 வயது சிறுமியை காதலன் உட்பட 6 பேர் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இந்த சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது 6 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
இந்த 14 வயது சிறுமி 17 வயது சிறுவனை காதலித்துள்ளார். அந்த சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்களான ராஜ், மகர ஜோதி, பிரவீன், முத்து மற்றும் 16 வயது சிறுவன் போன்றோரும் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.