பெண்ணை நிர்வாணமாக்கி மிரட்டி 7 லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாள நகர் பகுதியில் 43 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் விவாகரத்து பெறுவதற்காக திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலைபார்க்கும் டார்ஜன் என்பவரை அணுகியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வீட்டிற்கு வந்து வாங்கி கொள்கிறேன் என்று கூறிவிட்டு டார்ஜன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் மட்டுமே வீட்டில் தனியாக இருந்ததால் டார்ஜன் தூக்க மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து அவருக்கு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய அந்த பெண்ணை வழக்கறிஞர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரை நிர்வாணமாக்கி பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். அதன் பின் நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை சமூக வளைதளத்தில் வெளியிடுவேன் என அந்த பெண்ணை மிரட்டி அவரிடம் இருந்து டார்ஜன் 7 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொடைக்கானலில் பதுங்கியிருந்த டார்ஜனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.