Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் மகளை கடத்திட்டு போயிட்டாள்” உறவினர்கள் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சொத்து தகராறில் சிறுமியை கடத்தி சென்ற இரண்டு உறவுகார பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள நொளம்பூர் பகுதியில் புவனேஸ்வரி என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் புவனேஸ்வரி நொளம்பூர் காவல் நிலையத்தில் தனது 12 வயது மகளை உறவுக்காரப் பெண் ஒருவர் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புவனேஸ்வரியின் உறவினரான கவுசல்யா என்ற பெண் சிறுமியை திருவெறும்பூருக்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு புவனேஸ்வரியிடம் ஒப்படைத்து விட்டனர்.

அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கௌசல்யா மற்றும் புவனேஸ்வரி ஆகியோருக்கு இடையில் ஏற்கனவே சொத்து தகராறு இருந்துள்ளது. இதனால் கௌசல்யா புவனேஸ்வரியின் மகளை கடத்தி சென்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் கௌசல்யாவையும், அவருக்கு உதவியாக இருந்த சிறுமியின் சித்தியான தேவி என்ற பெண்ணையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |