புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் தச்சுத் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் மாணிக்கம் அபிராமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாணிக்கம் அடிக்கடி மது அருந்தியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வாழ்க்கையை வெறுத்த மாணிக்கம் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.