Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING :”பள்ளி கல்வி இயக்குநர்கள் மாற்றம்” தமிழக அரசு அதிரடி…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கருப்புசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக இருந்த ராமேஸ்வர் முருகன், பள்ளிசாரா கல்வி இயக்குநராக மாற்றபட்டுள்ளார். பள்ளிசாரா கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக்கல்வி இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக நேற்று தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தற்போது அந்த துறையின் இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |