துனிசியா நாட்டில் குழந்தை ஒன்று தன்னந்தனியாக நடுக்கடலில் கதறி அழுதபடி ரப்பர் மிதவை ஒன்றில் மிதந்து கொண்டிருந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
துனிசியாவில் உள்ள கெலிபியா என்ற பகுதியில் குழந்தை ஒன்று கடற்கரையிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் மிதந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் நடு கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த குழந்தையை போராடி மீட்டுள்ளனர்.
மேலும் அந்த குழந்தை இளஞ்சிவப்பு நிற ரப்பர் மிதவை ஒன்றில் கதறி அழுதபடி மிதந்து கொண்டிருந்த போது அந்த குழந்தையை மீட்பு குழுவினர் போராடி மீட்ட புகைப்பட காட்சி வெளியாகியுள்ளது. இதற்கிடையே அந்த குழந்தையின் பெற்றோர் கவனக்குறைவால் அந்த குழந்தை காற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.