நடிகை வனிதாவிற்கு மீண்டும் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அவரது வருங்கால கணவரின் பெயர் எஸ் என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் என ஜோதிடர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது வனிதா திருமண கோலத்தில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்த எஸ் தொடங்கும் நபர் இவரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவர் நான்கு படங்களில் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அந்த படங்களில் ஒன்றாக இந்தப் படம் இருக்கும் என்றும், அதனின் புகைப்படம் தான் இது என பலரும் கூறி வருகின்றனர்.