தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஐந்து விதமான சுற்றுலா திட்டங்களை அறிவித்துள்ளது. ஒரு நாள் முதல் 8 நாட்கள் வரை சுற்றுலா செல்ல www.ttdconline.com என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.