Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் செல்போன் நம்பர் இணைப்பு…. ரொம்ப ஈஸியா பண்ணிடலாம்…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் ஏதாவது குறிப்பிட்ட தகவல்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் செல்போன் நம்பர் கட்டாயமாக இணைக்கப்பட்ட வேண்டியிருக்கும்.

ஏனெனில் செல்போன் நம்பருக்கு அனுப்பப்படும் OTP நம்பர் மூலமாகத்தான் ஆதாரில் அப்டேட் செய்ய முடியும். எனவே ஆதார் கார்டில் மொபைல் செல்போன் நம்பரை கட்டாயம் இணைத்து வைத்திருக்க வேண்டும். இதற்கு ஆதார் சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும். அங்கு சென்று முதலில் ஆதார் அட்டை திருத்தம் படிவத்தை நிரப்ப வேண்டும். அதில் செல்போன் நம்பரை நிரப்பிவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

அதில் உங்களுடைய பயோமெட்ரிக் (கைரேகை/ போட்டோ ஸ்கேன்) கொடுக்க வேண்டும். பின்னர் உங்களுக்கு ஒரு சரிபார்ப்பு எண் வழங்கப்படும். இந்த எண்ணை பயன்படுத்தி உங்களுடைய ஆதார் அப்டேட் நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1947 என்ற எண்ணிற்கு அழைத்து கேட்டுக்கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது.

Categories

Tech |