பள்ளி சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
லண்டனில் கிழக்குப் பகுதியில் கடந்த 2ஆம் தேதி மாலை 7.30 மணியளவில் ஒரு சிறுவன் பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் அமர்ந்த நிலையில் அவன் அருகில் சென்று மர்ம நபர் ஒருவர் உட்கார்ந்து உள்ளார். அதன் பின்பு அந்த சிறுவனிடம் பேசியவாறே அவனிடம் தவறுதலான வார்த்தைகளை உபயோகித்துள்ளார். இதனையடுத்து அச்சிறுவனின் மீது பாலியல் ரீதியாக துன்பம் கொடுத்துள்ளார். அப்போது அந்த சிறுவன் அவன் கையில் இருந்த செல்போனை பயன்படுத்தி அவரை புகைப்படம் எடுத்துள்ளான். மேலும் அந்த சிறுவன் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்று நடந்ததை பற்றி தெரிவித்துள்ளான்.
மேலும் இது குறித்து சிறுவனின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் கூறியுள்ளனர். அந்த சிறுவன் எடுத்த புகைப்படத்தை வைத்து போலீசார் அவரை தொடர்பு கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “இந்த புகைப்படத்தில் இருக்கும் நபரின் வயது 35க்குள் இருக்கும். மேலும் இவரை உங்களுக்கு தெரிந்திருந்தாலோ அல்லது பார்த்திருந்தாலோ தயவுசெய்து முன்வந்து கூற வேண்டும். இந்த நபரை கண்டுபிடிப்பது மிகவும் அவசியமானது” என்று கூறியுள்ளனர்