Categories
பல்சுவை

கிரியேட்டர்களுக்கு இனி அதிக வருமானம்…. புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய யூட்யூப்….!!!?

யூடியூப் ஒரு சமூக வலைத்தளமாக மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு தளமாகவும் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் படைப்பாளிகள் பணம் சம்பாதிப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. வீடியோக்களை பதிவிடும் பிரியர்களுக்கு விளம்பர வருவாயில் கமிஷன் கொடுக்கிறது. அதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில் தியேட்டர்கள் பணம் சம்பாதிப்பதற்கு புதிய திட்டம் ஒன்றினை யூட்யூப் அறிமுகம் செய்துள்ளது. அதற்காக ” super thanks” என்ற புதிய திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. இதையடுத்து டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற போட்டி நிறுவனங்கள் கிரியைகளை கவரும் வகையிலான புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அதற்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த அம்சத்தை யூட்யூப் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி ஒரு தியேட்டரின் வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ‘super thanks’ வாங்கிக்கொள்ள முடியும். இதன் விலை 2 டாலர் முதல் 50 டாலர் வரை என தெரிவித்துள்ளது. இந்தப் பணம் சம்பந்தப்பட்ட கிரியேட்டருக்கு சேரும். தற்போது 68 நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான தியேட்டர்களுக்கு இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மிக விரைவில் உலகம் முழுவதும் அறிமுகம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |