ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் பிரான்ஸை போலவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகளுக்குள் நுழைவதற்காக இன்று முதல் ஹெல்த் பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விதிகளை இத்தாலியும் அமல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இரவு கிளப்கள், உள்நாட்டு விமானங்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் ஜிம்களுக்குள் நுழைவதற்கு கொரோனா தொற்று இல்லை அல்லது கொரோனாவிலிருந்து மீண்டதற்கான ஆதாரம், தடுப்பூசி போட்டதற்கான ஆதாரங்களை காட்டும் “பச்சை சான்றிதழ்” கட்டாயமாக்கும் நடவடிக்கையில் இத்தாலிய அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.