தாய் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆயந்தூர் பகுதியில் விக்டர் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடலூரில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆனந்தராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு மது அருந்தி விட்டு வந்ததால் ஆனந்த ராஜை அவரது தாய் கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தராஜ் தனது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.