அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இவர் மின் துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இவர்களது வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அங்கு பணம் மற்றும் நகை எதுவும் கிடைக்காததால் அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். இது குறித்து முரளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதிகாரியின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.