Categories
தேனி மாவட்ட செய்திகள்

பந்தல் போடுவதற்கு வாங்குனேன்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… 3 பேரை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து டைமண்ட் கம்பி மற்றும், கட்டு கம்பியை திருடி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கோகிலாபுரத்தில் அ.ம.மு.க ஒன்றிய செயலாளரான தீபாவளிராஜ் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனைமலையன்பட்டியில் இவருக்கு சொந்தமான திராட்சை தோட்டம் உள்ளது. இதனையடுத்து திராட்சை தோட்டத்திற்கு பந்தல் போடுவதற்கு 100 அடி டைமண்ட் கம்பியும், 60 கிலோ கட்டுக்கம்பிகளையும் வாங்கி தோட்டத்தில் உள்ள அறையில் வைத்திருந்துள்ளார். இதனை அறிந்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் அறையில் இருந்த கம்பிகள் மற்றும் 3,000 அடி நீளமுள்ள சொட்டுநீர் பாசன குழாய்களையும் திருடி சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கம்பிகள் திருடு போனதை பார்த்த தீபாவளிராஜ் அதிச்சியடைந்தது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராயப்பன்பட்டி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கம்பிகள் மற்றும் குழாய்களை திருடியது ஆலைமலையன்பட்டியை சேர்ந்த மல்லையன்சாமி(46), அய்யனார்(28). முத்தையா(41) என்பது தெரியவந்துள்ளது. மேலும் உடனடியாக அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |