Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்த…. கடைசி தேதி நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது தொடர்பான 15 CA, 15 CB படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசு நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி இந்த படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தாகமத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை அண்மையில் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்தது.

இதில் படிவங்களை தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் சில சிக்கல்களை சந்தித்தனர். இதுகுறித்து புகாரும் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்கனவே 15 CA, 15 CB படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 15 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிலரின் கோரிக்கைகளை ஏற்று கடைசி தேதி ஆகஸ்ட் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |