Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு… அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இளைஞர்கள் வேலை தேடி சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் தென்மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு குறைவாக உள்ளதால் அங்கு முதலில் அமைக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைப்பதே நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |